போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இது தொர்பில் கூட்டுத்தபானம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்கள் போதுமான அளவு இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
எனவே, எரிபொருள் கையிருப்பு முடிந்துவிட்டதாகக் கூறும் பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வேண்டுகோண் விடுத்துள்ளது.