வவுனியா மாவட்டத்தின் பெயரை “வவுனியாவ” என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கான 06-09-2022 தேதியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2296/05 வெளியிடப்பட்டுள்ளது.
அதன் ஆங்கில வடிவில் தற்போதைய வவுனியா நகர சபையை வவுனியா நகர சபையாக தரமுயர்த்துவதற்கு பதிலாக “வவுனியாவ” நகர சபையானது “வவுனியாவ” நகர சபையாக தரமுயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா என வரலாற்று ரீதியாக குறிப்பிடப்பட்ட நிலையில் அதனை மாற்றியமைப்பது பிழை மட்டுமல்ல வரலாற்று விகாரமும் கூட என சி.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அதனை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு சி.வி.கே.சிவஞானம் கடிதம் எழுதியுள்ளார்.