0
பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.அவ்வாறு காலாவதியாகி உள்ள ஊசிகளின் தொகை ஏழு மில்லியன் ஆகும்
எதிர்வரும் 31 ம் திகதியுடன் குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மற்றும் மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.