மிக முக்கிய வழக்கில் இருந்து றிசாட் இன்று விடுதலை செய்யபட்டார்.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு வாக்களிப்பதற்கு மக்களை அழைத்துச் சென்றமை மற்றும் 95 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.