ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் நெல்லியடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரணவாய் பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் போதைப்பொருள் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய இளைஞனும் பெண்ணும் கரணவாய் சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.