யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கட்டட பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் சிசிடிவி கமராவில் பதிவாகும் வகையில் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மாலை விற்பனை நிலையத்தினை பூட்டி விட்டு சென்ற அரை மணி நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் விற்பனை நிலையத்தின் மதிலை ஏற்றி பாய்ந்து விற்பனை நிலையத்தில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளார்.