தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
விஷேட விடுமுறைக்கு பதிலீடாக தமிழ்ப் பாடசாலைகள் எதிர்வரும் (29) சனிக்கிழமை நடாத்தப்படுமென்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் தமிழ்ப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை பெரும்பாலும் குறைந்தே காணப்படும். இது கருதியே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். எனினும் (25) விடுறை அவசியமில்லை என்று தீர்மானிக்கும் பாடசாலைகள், தொடர்ந்தும் நடத்தலாம் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.