இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடி உள்ள அதே நேரம் இலங்கை பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பலதரப்பட்ட கலந்துரையாடல் நடை பெற்ற வன்னம் உள்ளது.
அதே போல இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அதன்படி, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.