0
மட்டுப்படுத்த பட்ட வகையில் அச்சிடப்பட்டு வழங்கி வந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாகவும் வரும் வாரங்களில் ஜேர்மனியில் இருந்து 500,000 அட்டைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.