யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியைச் சேர்ந்த பஸ் சாரதியே வவுனியா விபத்தில் பலியாகினார்.
வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இருந்து யாழ். மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி இவர் செலுத்திச் சென்ற அதி சொகுசு பஸ்ஸே வவுனியா, நொச்சிமோட்டைப்பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.
உடுப்பிட்டியைச் சேர்ந்த சிவபாலன் சிவரூபன் (வயது 32) என்ற சாரதியே உயிரிழந்தார்.
இவர் உடுப்பிட்டி பிரதேசத்தின் பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் துடிப்புடன் முன்னின்று செயற்படுபவர் எனத் தெரியவந்துள்ளது.
சமூகச் செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராவார். அத்துடன் கடின உழைப்பாளியுமாவார். இவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.