பொலனறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற கைதிகளில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்தநிலையில், 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தப்பிச் சென்றுள்ள ஏனையவர்களைக் கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
…….