அம்பாறை, திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
13 வயதான குறித்த மாணவர்களுக்கிடையில் இன்று பிற்பகல் பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் மோதல் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகின்றது.
உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.