அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு – கண்ணகி கிராமத்தில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (வயது 32) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை வேளையில் யானையால் வீடு உடைக்கப்படும் போது, தமது பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சித்த வேளை குறித்த பெண் யானையின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தள்ளது.
அதேவேளை, இந்த யானையின் தாக்குதலில் கண்ணகி கிராமம் பகுதியில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.