வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்குப் பின்னால் படையினரும் பொலிஸாரும் செயற்படுகின்றனர் என்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் குற்றச்சாட்டை சபையில் நேற்று (10) முன்வைத்தார்.
எனவே, இது தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பின்னர் அவற்றை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பும் போது உரிய சட்டமுறை பின்பற்றப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக நீதிமன்றத்தின் ஊடாக குறித்த போதைப்பொருட்கள் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்படுவது சிறந்த முறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸார் நேரடியாக அவற்றை ஆய்வுக்கு அனுப்பும் முறை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்தினார்.