இலங்கையின் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்குக் கொழும்பு பிரதான நீதிவான் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்துள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இாஜாங்க அமைச்சருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பாகக் கடந்த ஒக்டோபர் மாதம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான காரணிகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு பிரதம நீதிவான், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்தார்.