மட்டக்களப்பு மாவட்டம், மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று முழுமையான சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இன்று முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரையும் துயிலும் இல்லத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சிரமதானப் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் த.சுரேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேச கிளையின் செயலாளர் பொ.நேசதுரை, தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி பொருளாளர் நடராசா மற்றும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த காலங்களில் பல கெடுபிடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மாவீரர் நாளில் விளக்ககேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.