கொழும்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்பில் இருந்த பல சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் தொடர்பில் முன்னாள் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ரோஹித அபேகுணவர்தனவும் திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். ஒருமுறை அவரைத் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவர முயற்சித்தனர்” – என்றார்.
இது தொடர்பான நிதி மோசடி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கிடையிலான பல பரிவர்த்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தான் கூறும் அனைத்து விடயங்களுக்கும் தாம் பொறுப்பு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.