புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி யுவதி யாழில் நீரில் மூழ்கி மரணம்

கிளிநொச்சி யுவதி யாழில் நீரில் மூழ்கி மரணம்

1 minutes read

யாழ்ப்பாணம், வடமராட்சி – கற்கோவளம் பகுதியில் இன்று பிற்பகல் கடலில் நீராடி விட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.

இணைந்து நீராடிய நண்பர்களால் கூக்குரலிட்ட நிலையில் அருகிலுள்ள இராணுவத்தினர் அந்த யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அலன்மேரி ஆனந்தராஜா (வயது 18) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More