தமிழ் மக்களின் விடிவுக்காகத் தங்களை ஆகுதியாக்கியவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
தமிழ் மக்களின் விடிவுக்காகத் தங்களை ஆகுதியாக்கியவர்களை ஒருவாரம் நினைவேந்தி நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தமிழ் மக்களால் வருடாந்தம் முனனெடுக்கப்படும்.
இந்த ஆண்டும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
தாயகத்தில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
…….