சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 80 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் உள்ள சிறைகளில் தற்போது 26 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இவர்களில் 80 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்” – என்றார்.