0
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செங்கலடி – பதுளை பிரதான வீதியிலுள்ள பங்குளாவடி, புளியடிச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்திலே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
18 வயதுடைய சதுர்ஷன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.