இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் இன்று (வயது – 79) காலமானார்.
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான அவர், பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
அவர் கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் காலமானார் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அவரது இறுதி நிகழ்வு குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.