விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது உங்களால் இவ்வாறு பாதையில் நிற்க இயலுமா என பிரபல சட்டத்தரணி ஒருவர் படையினருடனும் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணியின் வாகனத்தை இடை மறித்து படையினர் அவர் எங்கு பயணிக்கிறார் என்பது தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது அவருடைய அடையாள அட்டை என்பன சோதனை செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து பொலிஸ் அதிகாரியே சாரதி அனுமதி பாத்திரம் பயணம் தொடர்பான விடயங்களை விசாரிக்க வேண்டும். ஆனால் படையினரோ ஏனைய அதிகாரிகளோ அது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டிய தேவை இல்லை.
2009 இல் விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது உங்களால் இவ்வாறு வீதியில் நின்று மக்களை மறித்து விசாரிக்க முடியுமா அநாவசியமாக மக்களின் போக்குவரத்தில் சிரமத்தை எற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.