புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இயல்பு வாழ்வை இடைநிறுத்தி மாவீரர்களை நினைவேந்துங்கள்! – யாழ். மேயர் கோரிக்கை

இயல்பு வாழ்வை இடைநிறுத்தி மாவீரர்களை நினைவேந்துங்கள்! – யாழ். மேயர் கோரிக்கை

1 minutes read

“தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இன்று மதியத்துக்குப் பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் செயற்பாடுகளை இடைநிறுத்தி நினைவேந்தலை எழுச்சியுடன் கடைப்பிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.

அத்துடன் மாலை 6.05 மணி அளவில் தாயகத்தில் உள்ள ஆலயங்களில் மணியொலியை எழுப்புமாறும் ஆலய நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” – என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More