சர்வதேச நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
கொலையாளி ஜனாதிபதியாக உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும், குடும்பங்களாகச் சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களைப் பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களைக் காணாமல் ஆக்கப்பட்டோர் என அவர்களின் குடும்பத்தையும் ஏமாற்றுகின்றது போன்ற பல்வேறு வசனங்களைத் தாங்கிய பதாதைகளைப் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.