“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எப்போது அவருடன் இணைந்துகொள்வார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது.”
– இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது, அமைச்சுப் பதவிகளைப் பெறுவது போன்ற பல விடயங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எப்போது இணைவார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது.
பேச்சுக்களில் ஈடுபடும் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என்றும் சொல்ல முடியாது” – என்றார்.