“எதிர்க்கட்சியினரின் அவசரத்துக்காகத் தேர்தலை முடியாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். அப்போது எதிரணிக்குத் தக்க பதிலை மக்கள் வழங்குவார்கள்”
– இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்தில் மக்கள் தேர்தலைக் கோரவில்லை. எனினும், எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும். அதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த முடியாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்துகொள்ள முடியும். தேர்தல் வேண்டும் என்று அடம்பிடிக்கும் எதிரணியினருக்குத் தேர்தலின் போது மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள்” – என்றார்.