வடக்குக்கும் தெற்குக்கும் இடையே உள்ள உறவுப் பாலத்தை மேம்படுத்தும் வகையில் கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் செய்தனர்.
அவர்கள், கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களைப் பார்வையிட்டனர்.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிடச் சென்ற யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் அணி, அரசியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு முண்டியடித்தனர்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) அவர்கள் முண்டியடுத்து எடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கொழும்புக்கான இந்த விஜயத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.