காலி – பூஸா சிறைச்சாலையில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெரும் குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவில் 4 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 6ஆம் திகதி மேலும் 5 கைத்தொலைபேசிகள், சிம்கார்டுகள், சார்ஜர்கள் என்பன பூஸா சிறைச்சாலையில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
சிறைச்சாலை வளாகத்துக்குள் இந்த கையடக்கத் தொலைபேசிகள் கொண்டுவரப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.