நாட்டின் நலன் கருதியும், நாட்டை மேம்படுத்துவதற்காகவும் ‘மொட்டு’க் கட்சி அல்ல எந்தத் தரப்புடனும் கூட்டணி வைக்கத் தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. அறிவிப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் எந்தத் தரப்புடனும் கூட்டணி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்ற விடயத்தை வெளிப்படுத்தினார்.