அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிர்வாக சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பைச் சேர்ந்த ஆ.சசிந்திரன் என்பவரே உயிரிழந்தார்.
இவர் சமய, கலாசார, ஆன்மீக விடயங்களில் கூடுதலான ஈடுபாடு கொண்டவர்.
உயிரிழந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.