புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்குக் கடலில் தத்தளித்த படகு: 130 மியன்மார் அகதிகளுடன் மீட்பு!

வடக்குக் கடலில் தத்தளித்த படகு: 130 மியன்மார் அகதிகளுடன் மீட்பு!

1 minutes read

மியன்மார் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கியர்கள் எனக் கருதப்படும் சுமார் 130 பேர் வரையில் பயணித்த படகு ஒன்று வட இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர்கள் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று இறுதியாகக் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் அதிகளவானோரை ஏற்றிய படகு ஒன்று நிற்பதை அவதானித்த மீனவர் ஒருவர் படகை அண்மித்து அவதானித்த சமயம் படகில் இருந்தவர்கள் சிறுவர்களைத் தூக்கிக் காண்பித்தமையால் படகு ஆபத்தில் நிற்பதால் உதவி கோருகின்றனர் என்பதை மீனவர் ஊகித்துக்கொண்டார்.

இதையடுத்து கரை திரும்பிய மீனவர் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்துக்குக் கடற்படையினர் விரைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட படகை அவதானித்த கடற்படையினர், அதை மீட்டு காங்கேசன்துறைக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இதனிடையே மீட்கப்பட்ட படகு சேதம் காரணமாக விரைந்து பயணிக்க முடியாத காரணத்தாலும், அதில் இருந்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதனாலும், இதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்களினாலும் படகை காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு வருவதில் தாமதம் நிலவியது என முதலில் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More