கம்பளையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் கஞ்சா பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சிறிதளவு கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாடசாலை காவலாளி மற்றும் மூன்று இளைஞர்கள் விசாரணைகளின் பின்னர் கம்பளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.