இலங்கையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை வழக்கப்படி புதிய கடற்படைத் தளபதி பிரியந்த பெரேராவிடம் கடமைகளைக் கையளித்தார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கான பிரியாவிடையும் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, வைஸ் அட்மிரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 25 ஆவது தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.