எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்கின்றார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பஸ் ஒன்றை அன்பளிப்பாக அவர் கையளிப்பார்.
அவரது எண்ணக்கருவில் உருவான பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வில் பஸ் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் விஜயராஜன் உள்ளடங்கலான கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.