“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தேர்தலைக் கண்டு அஞ்சவில்லை. தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம்” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட நாம் துணை நிற்கவில்லை. தேர்தலைப் பிற்போடும் எண்ணம் அரசுக்கும் இல்லை. ஆனால், தேர்தலை எதிர்கொள்வதற்கு அஞ்சும், எதிரணிகளே இந்த விடயத்தில் வதந்திகளைப் பரப்பி வருகின்றன” – என்றும் மொட்டுக் கட்சி பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்.