உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கட்டளைச் சட்டத்தின் படி, சகல நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவில் 5 அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான உரையாடல் இன்றைய அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாக உள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இது தொடர்பாக இரண்டு மனுக்களை முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், அதைப் பரிசீலிக்க ஒரு திகதியையும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.