இலங்கையின் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
60 – 70 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீரிகம – ஹொரகெலே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.