0
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாளை விடுவிக்கப்படவுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படுகின்றது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.