கோழி முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் கோழி முட்டையின் விலை தற்போது 70 ரூபாவைத் தாண்டியுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை (26) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்களுடன் கலந்துரையாடி, நுகர்வோருக்கு முட்டைகளை வழங்குவதற்காக குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் ஆராய்ந்தார்.
இந்தக் கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றதுடன், கோழி முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்யவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.