முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் நகரப் பகுதிக்கு அண்மையாக வீட்டில் தனிமையில் இருந்தவரைக் கட்டிவைத்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபர், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அவரை கட்டிவைத்து கத்திமுனையில் அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளதுடன், வீட்டில் குளிரூட்டியில் இருந்த மதுபானங்களையும் எடுத்து அருந்திவிட்டுச் சென்றுள்ளார்கள்.
இந்தத் தகவலை முல்லைத்தீவுப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர்.