முல்லைத்தீவு, மாஞ்சோலைப் பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்திலிருந்து குதித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு, முறிப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
முறிப்பிலிருந்து பாடசாலை நிகழ்வுக்காக மாஞ்சோலைக்கு செல்வதற்கு, வீதியால் சென்ற வானத்தை மறித்து அதன் பின்பக்கத்தில் மாணவனும், மாணவியும் ஏறியுள்ளனர்.
அவர்கள் இறங்கவேண்டிய இடத்தில் வாகனம் நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து மாணவனும், மாணவியும் வாகனத்திலிருந்து குதித்துள்ளனர். இதனை அவதானிக்காமல் வாகனம் சென்றுள்ளது.
வாகனத்திலிருந்து குதித்ததில் தலையில் படுகாயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மாணவன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்த மாணவியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.