பதுளை – கஹட்டருப்ப, அம்பிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓட்டோவில் பயணித்த 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கஹட்டருப்ப பிரதேசத்திலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், அம்பிட்டியவில் இருந்து முத்துமால பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ஓட்டோ ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 7 வயது சிறுமி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் எனவும்,அவரது தாய் உட்பட மூவர் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் தாயே ஓட்டோவைச் செலுத்திச் சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதியைக் கைது செய்த கஹட்டருப்ப பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.