செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எங்களிடம் நாட்டை ஒப்படைத்தால் கட்டியெழுப்போம்! – சஜித் உரை

எங்களிடம் நாட்டை ஒப்படைத்தால் கட்டியெழுப்போம்! – சஜித் உரை

3 minutes read

“நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்பித் தருகின்றோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 52 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று பிலியந்தல தர்மராஜ மகா வித்தியாலயத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரபஞ்சம் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டுக்குப் பழக்கப்பட்ட ஒரு திட்டமல்ல. மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு பல்வேறு விடயங்களைச் செய்யப் பழகியதே தவிர, அதிகாரம் இல்லாத போது மக்களுக்காக சேவை செய்ய நம் நாடு பழக்கப்படவில்லை. இது சம்பிரதாயக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம். முறைமை மாற்றத்தை கோருபவர்களுக்கு இது மிகவும் வெற்றிகரமான முறைமை மாற்றமாகும்.

இந்நாட்டில் சுகாதாரத்துறைக்கு, கல்வித் துறைக்கு இது போன்ற பணியை வேறு எந்த எதிர்க்கட்சியும் செய்யவில்லை. நாட்டை வங்குரோத்தாக்கி நாட்டுக்கு எந்தவொரு பணியையும் ஆளும் கட்சி செய்வதாக இல்லை.

ஏதேனும் ஒரு தருவாயில், தற்போதைய எதிர்க்கட்சியிடம் மக்கள் நாட்டின் பொறுப்பை ஒப்படைத்தால், மூச்சு, பிரபஞ்சம் வேலைத்திட்டங்கள் போன்று எமது நாட்டின் நிதிப் பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்த்து வைப்போம்.

“இல்லை” “முடியாது” “பார்ப்போம்” போன்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை. எந்தவொரு சவால் விடுக்கப்பட்டாலும் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மீண்டும் வலுவான, வளமான நாட்டை உருவாக்குவோம்.

அரசியல் மேடைகளில் தம்பட்டம் அடிக்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த பஸ்களை வழங்கும் திட்டம் நகைச்சுவையாக இருக்கும். 2022 ஆம் ஆண்டில், சில பாடசாலைகளில் பல்வேறு பயணங்களுக்கான போக்குவரத்துக் கட்டணமாக கிட்டத்தட்ட 20 இலட்சம் ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக பஸ் கொடுப்பதன் மூலம் இவ்வளவு பெரிய தொகை வசூலிப்பது குறையும்.

இளைஞர்களைப் பகடைக்காயைப் போல் பயன்படுத்தும் தரப்பால் இன்னும் நாட்டுக்குச் சேவை ஆற்றப்படவில்லை. அத்தரப்பினர் தங்கள் கட்சி அலுவலகங்களை மிகவும் ஆடம்பரமாக நிர்மாணித்துள்ளனர். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் வாடகை வீட்டில்தான் இயங்கி வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் கட்சி நிதியை தன் விருப்பப்படி செலவிடுவதில்லை. அத்தகைய நிதி பிரபஞ்சம், மூச்சு போன்ற மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்படும். நாம் எவ்வளவு பணத்தைக் கொண்டிருந்தாலும் சரி, படித்தவர்களாக இருந்தாலும் சரி, ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை உருவாக்குவது நமது கடமையாகும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More