இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் (வயது 100) மறைவுக்கு இலங்கை அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்ட ஹீராபென் மோடி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கையின் அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.