யாழ்., வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்த சிசு நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது. சிசுவின் சடலத்தை நாய் இழுத்துச் சென்றதால், இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
வத்திராயன் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் நாய் ஒன்று சிசுவின் சடலத்தை இழுத்துச் சென்றதைப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக நாயை விரட்டி, சடலத்தை மக்கள் மீட்டனர்.
பிரசவமான உடனேயே நிலத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் அது என்பது கண்டறியப்பட்டது. நாய் இழுத்துச் சென்ற இடத்துக்கு அண்மையாக உள்ள பகுதியில் சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டது.
நேற்றுமுன்தினம் அந்தச் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
வீடொன்றின் பின் பகுதியில் சிசுவின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டிலிருந்த பெண், பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் கணவனைப் பிரிந்து வாழ்கின்றார் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.