இந்தியக் கடன் உதவி திட்டத்தின் கீழ் 75 கோடி ரூபா பெறுமதியிலான 75 பஸ்களை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கையளித்தார்.
பத்தரமுல்ல ஜப்பான் நட்பு மாவத்தை பகுதியில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன்போது கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன,
“போக்குவரத்துத்துறை முக்கிய தருணத்தை தற்போது எதிர்கொண்டுள்ளது. கிராமிய வீதிகளுக்குப் பொருத்தமான வகையில் இந்தியக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 75 பஸ்களைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்தியக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 75 கோடி பெறுமதியிலான 75 பஸ்களைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 75 ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு இந்த பஸ்களைகள் சகல டிபோக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
500 புதிய பஸ்களை இவ்வருடத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – என்றார்.
இந்த நிகழ்வில் இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கலந்துகொண்டார்.