கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பில் கடத்தப்பட்ட 10 வயது சிறுவன் கொழும்பு – கிராண்ட்பாஸில் மீட்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் காரணமாக குறித்த சிறுவன் கடத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் பெண் ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து ஹெரோயினைப் பெற்றுக்கொண்ட நபர் அதற்கான பணத்தை முழுமையாகச் செலுத்தாமையால், சிறுவன் கடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.