இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
எனவே, அது தொடர்பில் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது எனக் கட்சியின் கடந்த அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.