யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் செல்கின்ற பிரதான வீதியில் பொன்னாலை பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமோகன் கிருஷாந்தன் (வயது – 21) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர் கடந்த 5 மாதங்களாகப் பொன்னாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது 21ஆவது பிறந்ததினம் நேற்றுமுன்தினமாகும். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து அவர் காணாமல்போயுள்ளார்.
அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், கிணற்றிலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலணி மற்றும் சைக்கிள் என்பன கிணற்றுக்கு வெளியே காணப்பட்டன.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் நீண்ட காலமாக உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.